செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் டீசர் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (16:14 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குகிறார்.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் சுவிஸ் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று முழுப் படத்தையும் தனுஷ் பார்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வரும் ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளதாகவும், அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி அறிவிப்பு.. எச்சரிக்கை விடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments