Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஜிஆர் தம்பியாக நடித்த பழம்பெரும் நடிகர் மறைவு.. திரையுலகினர் நேரில் அஞ்சலி..!

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (13:21 IST)
எம்ஜிஆர் நடித்த நாளை நமதே என்ற திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்த நடிகர் சந்திரமோகன் இன்று காலமானதை அடுத்து அவருடைய இல்லத்திற்கு சென்று திரையுலகினர் அஞ்சலி செலுத்து வருகின்றனர். 
 
கடந்த 1975 ஆம் ஆண்டு எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்த திரைப்படம் நாளை நமதே. சேது மாதவன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் எம்ஜிஆர் தம்பியாக பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் என்பவர் நடித்திருந்தார். தெலுங்கில் இவர் பல படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் நாளை நமதே, நீயா உள்பட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இதய நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரமோகன் சிகிச்சியின் பலனின்றி இன்று காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 
 
ஐதராபாத்தில் அவருடைய இறுதிச்சடங்கு வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று கூறப்படுகிறது. 
 
இன்று காலை நடிகர் கங்கா மறைந்தார் என்ற செய்தியே திரையுலகினார் மத்தியில் அதிர்ச்சி அடைய செய்த நிலையில் தற்போது நடிகர் சந்திரமோகனும் காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments