மைசூர் மாளிகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்பு!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (16:49 IST)
வடிவேலுவின் ரி எண்ட்ரி படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸின் காட்சிகள் மைசூர் மாளிகையில் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக  அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வடிவேலு மற்றும் பிரபுதேவாவின் ஆரம்ப கால பாடல்கள் மற்றும் நடனம் வெகு பிரசித்தி பெற்றது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ள பாடல் மற்றும் நடனம் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் வடிவேலு மற்றும் நாய்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழுவினர் இப்போது மைசூர் அரண்மணைக்கு சென்று முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கதைப்படி வடிவேலு மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதால் மாளிகை போன்ற அரண்மணையை அவரின் வீடுபோல காட்டி படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments