என்னதான் ஆச்சு VJS & மிஷ்கினின் ‘டிரெய்ன்’ படம்?... டிரைலர் அப்டேட்!

vinoth
செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (08:21 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார்.

மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு டிடெக்டிவ்வாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தும் இன்னும் ஓடிடி மற்றும் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததால் படத்தின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

இந்த படம் முடிந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸ் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி வியாபாரம் இன்னும் முடியவில்லை என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் டிரைலரை தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: தொடங்கிய இரண்டாம் நாளிலேயே கைகலப்பு – 'திவாகர்' விவகாரத்தால் உச்சக்கட்ட மோதல்!

பிக்பாஸ் செட்டை இழுத்து மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு.. நிறுத்தப்படுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி..!

அனிகா சுரேந்திரனின் அழகிய க்ளிக்ஸ்…இன்ஸ்டா வைரல்!

மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

நான்கு நாட்களில் 335 கோடி ரூபாய் வசூல்… பிளாக்பஸ்டர் காந்தாரா !

அடுத்த கட்டுரையில்
Show comments