Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஷ்கின் – விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

vinoth
திங்கள், 27 ஜனவரி 2025 (09:09 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார்.

மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு டிடெக்டிவ்வாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பின்தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தை பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அதே தேதியில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!

அடுத்த கட்டுரையில்
Show comments