மிஷ்கின் விஜய் சேதுபதி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (14:06 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் . இந்த படம் பிப்ரவரியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதி வேறு சில படங்களில் நடித்து வருவதால் இந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது அவர் தேதிகள் ஒதுக்கியுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நவம்பர் 24 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு “டிரெய்ன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் கதை முழுவதும் கோவையில் இருந்து சென்னை செல்லும் ஒரு தொடர் வண்டியில் நடக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் நடிகர் ஜெயரம் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments