Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிஷ்கின் விஜய் சேதுபதி படம் என்ன ஆச்சு?- கமர்ஷியல் இயக்குனரை நோக்கி மக்கள் செல்வன்!

மிஷ்கின் விஜய் சேதுபதி படம் என்ன ஆச்சு?- கமர்ஷியல் இயக்குனரை நோக்கி மக்கள் செல்வன்!
, வெள்ளி, 27 ஜனவரி 2023 (14:18 IST)
இயக்குனர் மிஷ்மின் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என தகவல்கள் வெளியாகி வந்தன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரின் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் போது விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்போது இருவரும் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்த படம் பிப்ரவரியில் தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் இதுவரை அதற்கான எந்தவொரு வேலைகளும் தொடங்கவில்லை. இதற்கிடையில் விஜய் சேதுபதி சுந்தர் சி இய்ககத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதனால் மிஷ்கின் – விஜய் சேதுபதி படம் தள்ளிவைக்கப் பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடற்கரையில் கேண்டிட் போட்டோஷுட்… ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்