Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகளைப் படமாக்கவே இல்லை…” பிசாசு 2 பற்றி இயக்குனர் மிஷ்கின்!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (08:38 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.


மிஷ்கின்  இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2’ .இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல்பாகத்தும் இரண்டாம் பாகத்துக்கும் திரில்லர் என்பதைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் ரிலீஸானது.

இந்த படத்தில் சுமார் 20 நிமிடக் காட்சிகளில ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் சமீபத்தில் அந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்து இருந்தார். இது சம்மந்தமாக ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணலில் “இப்போது நாங்கள் அந்த காட்சிகளை நீக்கிவிட்டோம். ஏனென்றால் இது ஒரு தாய்க்கும் அவளது மகளுக்கும் இடையிலான கதை. இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு அந்த படத்தைப் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் இப்போது நிர்வாணக் காட்சிகளை படமாக்கவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் “ஒரு புகைப்படக் கலைஞர் மூலமாக புகைப்படங்கள் மட்டுமே எடுத்தோம். ஆனால் அதை நான் பார்க்காமலே அழித்துவிட்டேன். அதைப் பயன்படுத்தினால் சென்ஸாரில் ஏ சான்றிதழ் கொடுப்பார்கள். அதனால் குழந்தைகள் பார்க்க முடியாது என்பதால் நீக்கிவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்