Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நந்தலாலா படத்தில் விஜய் சேதுபதியை நிராகரித்த மிஷ்கின்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (08:32 IST)
இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனர்களில் ஒருவர்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவான சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் நந்தலால ஆகிய படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. ஆனால் அதன் பின்னர் அவர் எடுத்த முகமூடி உள்ளிட்ட சில படங்கள் சரியாக போகவில்லை. இந்நிலையில் இப்போது தனது ஹிட் படமான பிசாசு படத்தின் பார்ட் 2வை எடுத்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி மிஷ்கின் உறவு பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. மிஷ்கின் 2010 ஆம் ஆண்டு நந்தலாலா படத்தை இயக்கியபோது அதில் ஒரு பாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டாராம். ஆனால் அவரின் நடிப்பு பிடிக்காததால் மிஷ்கின் அவரை நீக்கிவிட்டாராம். 10 ஆண்டு கால இடைவெளியில் விஜய் சேதுபதி மிகப்பெரிய கதாநாயகனாக உருவாகிவிட, அவரை தன் படத்தில் நடிக்க வைத்துள்ளார் மிஷ்கின்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments