நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இப்போது தனுஷின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் படத்துக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அப்போது தனுஷ் பற்றி பேசிய அவர் என்னை தனுஷ் மால்மோ என்றுதான் அழைப்பார் எனக் கூறியுள்ளார். ஆனால் நெருங்கிய நண்பர்கள் மாலு என்று அழைப்பார்களாம்.