Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படம் பற்றி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட இயக்குனர் மிஷ்கின்!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (10:16 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு முன்பாகவே பேக்கப் செய்துவிட்டு சென்னைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் படம் பற்றி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் “இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன் என்றும் -12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தனர் என்றும் சண்டை பயிற்சியாளர் அன்பறிவு மிகச்சிறந்த ஒரு சண்டை காட்சியை படமாக்கினார்கள். மேலும் உதவி இயக்குநர்களில் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது என நெகிழ்ந்த மிஷ்கின், படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தான் என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான் அவன் நெற்றில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஸ் ஜே சூர்யா, சித்தார்த்தோடு மலேசியா பறந்த கமல்ஹாசன்… படு ஸ்பீடில் இந்தியன் 2 ப்ரமோஷன்!

ஹரா படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்… எப்போது ரிலீஸ்?

பிரபல ஓடிடியில் வெளியானது சந்தானத்தின் ‘இங்க நாங்கதான் கிங்கு’ திரைப்படம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் முக்கிய அப்டேட்!

என் வேலை இனிமேல்தான் ஆரம்பம்… கல்கி படம் பார்த்த கமல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments