Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 66 பட தயாரிப்பாளரோடு இணைந்த மிஷ்கின்?… வெளியான தகவல்!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (12:11 IST)
இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அந்த படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின். அதனால் அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்கிறார். விஜய் சேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவும், இயக்குனர் மிஷ்கினும் செய்து முடித்துள்ளனர். ரிலீஸுக்கு கிட்டத்தட்ட தயாராகியுள்ளது இந்த திரைப்படம். இந்த படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை தளபதி 66 பட தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் அவர ஒரு படத்தைத் தயாரிபபதற்கான வாய்ப்புகளும் இப்போது உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தையில் இருவரும் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனரை கடத்திய 5 பேர் கைது.. காதல் விவகாரமா?

யு, ஏ, யு/ஏ இனி இல்லை. 3 வெவ்வேறு வகையான திரைப்பட சென்சார் சான்றிதழ்..

ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. கட்டிப்பிடித்து மகிழ்ச்சி..!

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments