Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயன் & மண்டேலா இயக்குனர் கூட்டணியில் புதிய படம்… வில்லனாக இயக்குனர் மிஷ்கின்?

சிவகார்த்திகேயன் & மண்டேலா இயக்குனர் கூட்டணியில் புதிய படம்… வில்லனாக இயக்குனர் மிஷ்கின்?
, வெள்ளி, 3 ஜூன் 2022 (17:14 IST)
மண்டேலா படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் அடுத்து சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அதையடுத்து டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து SK 20 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மிஷ்கின் சில படங்களில் நடித்திருந்தாலும் முதல்முறையாக இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் புதிய வெப் சீரிஸ்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு