Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் படம்… மிரட்டலான டைட்டில்… தொடங்கிய ஷூட்டிங்!

இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் படம்… மிரட்டலான டைட்டில்… தொடங்கிய ஷூட்டிங்!
, செவ்வாய், 28 ஜூன் 2022 (11:05 IST)
இயக்குனர் மிஷ்கின் முதல்முறையாக இசையமைக்கும் படத்தை அவரின் தம்பி ஆதித்யா இயக்குகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். மிஷ்கினின் படங்களில் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் பேசுபொருளாக இருக்கும். அது இளையராஜா இசை அமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின். இந்நிலையில் அவர், தனது தம்பி அதித்யா இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படத்துக்கு ‘டெவில்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.  இந்த படத்தை மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார். இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூடுபிடிக்கும் ‘கோப்ரா’ வியாபாரம்… வெளிநாட்டு உரிமையை மொத்தமாக கைப்பற்றிய நிறுவனம்!