Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேற லெவல் சர்ப்ரைஸ்... மைனா நந்தினி கணவரின் பிறந்தநாளை எங்கே சென்று கொண்டாடியுள்ளார் பாருங்க!

வேற லெவல் சர்ப்ரைஸ்... மைனா நந்தினி கணவரின் பிறந்தநாளை எங்கே சென்று கொண்டாடியுள்ளார் பாருங்க!
, சனி, 10 ஜூன் 2023 (17:57 IST)
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார்.
 
இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.
 
இவரது முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா பின்னர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்துகொணடர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது கணவரின் பிறந்தநாளை லடாக் டூர் சென்று கொண்டாடியுள்ளார்.  அங்கு எடுக்கப்படட புகைப்படங்கள், வீடியோக்களை மைனா நந்தினி தனது இன்ஸ்டாவில் வெளியிட அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஸ்வாசம் குட்டி நயன் ஆக மாறிய ஜனனி - லைக்ஸ் அள்ளும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!