Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த காலத்தில் இப்படி ஒரு புருஷனா...? மைனா உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திய கணவர்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (08:13 IST)
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார்.
 
இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். இவரது முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா பின்னர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்துக்கொண்டார். மைனா நந்தினிக்கு அழகிய ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவருடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர். அப்போது மைனா எதிர்பார்க்காத வகையில் செம சர்ப்ரைஸ் கொடுக்க நினைந்த யோகேஷ் அவரது நெஞ்சில் மைனாவின் உருவத்தை பச்சை குத்தியதை நிகழ்ச்சியில் காட்டி எல்லோரையும் பிரம்மிப்பில் ஆழ்த்திவிட்டார். இதற்கு காரணம், மைனா எப்போதும் தன் கணவரிடம் உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் என கேட்டுக்கொண்டே இருப்பாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டேன்... ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சம்பவம்!

புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 என்னாச்சு… செல்வராகவன் அளித்த பதில்!

தீபாவளி வின்னர் லக்கி பாஸ்கரின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்… !

ராம்குமார் விஷ்ணு விஷால் படத்தில் நடந்த அதிரடி மாற்றம்!

கோவையில் தொடங்கும் ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… எப்போது தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments