என் வழி தனி வழி..! ரீரிலீஸாகும் படையப்பா! Uncut வெர்ஷனாக வெளியாகிறதா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Prasanth K
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (08:57 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம் ரீரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினிகாந்த் 170 படங்களுக்கு மேல் நடித்துள்ள நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களை நடித்து வருகிறார். இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் ரஜினிகாந்திற்கு மிகப்பெரும் ஹிட் படங்களாக பல அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமான படங்கள் பாட்ஷா, படையப்பா, எந்திரன் உள்ளிட்ட படங்கள். 

 

ரஜினிகாந்தின் பாட்ஷா படம் இதுவரை பலமுறை தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் ரஜினிகாந்தின் மிகப்பெரும் ஹிட்டான படையப்பாவும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் படையப்பாவின் அன்கட் வெர்ஷன் 4 மணி நேரம் சுமாருக்கு இருந்ததாகவும் அதை குறைத்து மூன்று மணி நேர படமாக்கியதாகவும் ஒரு செய்தி உண்டு.

 

இந்நிலையில் தற்போது ரீரிலீஸ் ஆகும் படையப்பா படம் முந்தைய அன்கட் வெர்ஷனாக 4 மணி நேரம் சுமாருக்கு ஓடும் படமாக ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments