காஜல் ஹீரோயினாக நடித்திருந்தாலும், எனக்குத்தான் முக்கியத்துவம் அதிகம்’ என்று கூறியுள்ளார் அக்ஷரா ஹாசன்.
கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், ஆரம்பத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். அதன்பின் பாலிவுட்டில் ‘ஷமிதாப்’ மூலம் நடிகையாக அறிமுகமானவர், தற்போது ‘விவேகம்’ மூலம் தமிழிலும் அறிமுகமாகிறார்.
“கொஞ்ச நாள் கழித்து தமிழில் நடிக்கலாம் என்று நினைத்தேன். அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் மூலம் அறிமுகமாவது எனக்குப் பெருமை. எனக்கு வந்த கதைகளில், என்னை மிகவும் ஈர்த்த கேரக்டர் இது. மிக முக்கியமான ரோலில் நடித்திருக்கிறேன். காஜல் அகர்வால் ஹீரோயின் என்றாலும், கதையின் முக்கிய அம்சமாக நான் இருப்பேன். பல்கேரியா மற்றும் செர்பியாவில், மைனஸ் 10 டிகிரி குளிரில் நடித்த அனுபவத்தை மறக்கவே முடியாது. தினமும் 12 மணி நேரம் அந்தக் குளிரில்தான் ஷூட்டிங் நடக்கும். படக்குழுவினர்தான் உதவியாக இருந்தனர்” என்கிறார் அக்ஷரா ஹாசன்.