Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கு விருப்பமான தலைவர் விஜய்; வைரலாகும் மாணவனின் விடைத்தாள்

Advertiesment
எனக்கு விருப்பமான தலைவர் விஜய்; வைரலாகும் மாணவனின் விடைத்தாள்
, செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (12:23 IST)
தளபதி விஜய்க்கு மிகப்பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா அளவிலும் ஏன் உலக அளவிலும் ரசிகர்களை  கொண்டுள்ளார். அவரது கண் அசைவுக்கு கட்டுப்படும் ரசிகர் கூட்டம்தான் அதிகம்.
விஜய் படம் ரிலீஸ் என்றால் போதும் அதை திருவிழாவாக கொண்டாடும் இந்த ரசிகர்கள், அவரது பெயரில் பல சமுதாய தொண்டுகளையும் செய்து வருகின்றனர். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதியுதவி அளித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இந்த  ரசிகர்கள் விஜய்க்காக செய்யும் பல நல்ல விஷயங்கள் இணையத்தில் கூட வைரல் ஆகி பாராட்டுக்களை பெற்றிருக்கிறது. 
webdunia
அந்த வகையில் விஜய்யின் குட்டி ரசிகர் செய்திருக்கும் வேலையை பார்த்தால் நீங்களும் ஆச்சரியத்தில் அசந்து போவீர்கள். அது என்னவென்றால், 5ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனிடம் தமிழ் பரீட்சையின் போது ”நீ விரும்பும் தலைவர்களுள் ஒருவர் பற்றி கட்டுரை வரைக என கேட்கப்பட்டிருக்கிறது.  இதற்கு அந்த மாணவன், நான் விரும்பும் தலைவர் விஜய். அவர் அழகாக இருப்பார் என எழுதி இருக்கிறார். இந்த விடைத்தாள் தான் தற்போது இணையத்தில்  வைரலாக பரவி வருகிறது.
 
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், விஜய்க்கு இப்படி ஒரு குட்டி ரசிகனா என வியந்துள்ளனர். அதே நேரம் இவர் செய்த இந்த செயலால் பள்ளியில் கண்டிப்பாக  திட்டு தான் வாங்கி இருப்பார் எனவும் பரிதாபப்பட்டிருக்கின்றனர். வேறு சிலரோ இவன் தெரியாமல் எழுதினானா? அல்லது தெரிந்துதான் இப்படி செய்தானா? என் கேள்வி எழுப்பி வருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்றாயனுக்கு சிம்பு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு