Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் நிலை ஹெச்ஐவியால் பாதிக்கப்படுவதை விட மோசம் என ட்வீட் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (15:50 IST)
அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடித்துள்ள அருவி படம் ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றுள்ளது. அருவி படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை வெளிச்சம் போட்டு  காட்டினர். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்தப் படம் பற்றி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன், எனது நிகழ்ச்சியையும், என்னையும் கிண்டல் செய்தாலும் அருவி நல்ல படம் என்று கூறியிருந்தார். அதேநேரம், பெண்ணியப் படமாக எடுத்திருந்தாலும், அடக்குமுறைக்கு,  அநீதிக்கு ஆளான பெண்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கிண்டல் செய்துள்ளதாக லட்சுமி  ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
நெட்டிசன் கேள்விக்கு பதில் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையில் கலந்து கொண்டீர்களா? கள்ளக்காதலா? அல்லது இயக்குனர் அல்லது அவரின் குடும்பாத்தாருக்கு இருக்கலாம். அதிருப்தி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார். மற்றொரு ட்வீட்டில் மீடியாவில் பெண்ணாக அதுவும் வெளிப்படையாக பேசுபவராக, சில வழிகளில் வெற்றிகரமாக, பிராமண சமூகத்தில் பிறந்து அதுவும் பாலக்காட்டு அய்யர் பாஷை பேசி, தமிழகத்தில் செட்டிலானவரின் நிலை  ஹெச்ஐவியால் பாதிக்கப்படுவதை விட மோசம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments