Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனை காப்பி அடிக்கிறாரா சந்தானம்?

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (13:51 IST)
சிவகார்த்திகேயனை சந்தானம் காப்பி அடிப்பதாக கடந்த கால நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. விஜய் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் சிவகார்த்திகேயனும், சந்தானமும். சிவகார்த்திகேயனுக்கு முன்பே சினிமாவுக்கு வந்துவிட்ட சந்தானம், முன்னணி காமெடியனாகத் திகழ்ந்து வந்தார். அவருக்குப் பின்னால் வந்த சிவகார்த்திகேயனோ, ஹீரோவாக ‘மாஸ்’ காட்டினார்.
 
அதைப் பார்த்து சந்தானத்துக்கும் ஹீரோ ஆசை வந்தது. ஆனால், அவர் ஹீரோவாக நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனாலும், ஹீரோவாகத் தொடர்ந்து சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
 
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படம், வருகிற 22ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தன்னுடைய பலத்த நிரூபிக்க, அதேநாளில் தன்னுடைய ‘சக்க போடு போடு ராஜா’ படத்தை ரிலீஸ் செய்கிறார் சந்தானம்.
 
அதாவது பரவாயில்லை. ‘வேலைக்காரன்’ படத்தின் டிக்கெட் புக்கிங் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட, உடனே தன்னுடைய படத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் புக்கிங் என அறிவித்தார் சந்தானம். அடுத்து, ‘வேலைக்காரன்’ படத்தின் சென்சார் சர்ட்டிபிகேட் வெளியாகி டிரெண்டிங்காக, உடனே ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் சென்சார் சர்ட்டிபிகேட்டையும் வெளியிட்டுள்ளார் சந்தானம். இதனால், சிவகார்த்திகேயனை சந்தானம் காப்பி அடிப்பதாகக் கூறுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த காலத்தில் குடும்பம் நடத்துவதே சாகசம்தான்- ‘குடும்பஸ்தன்’ மணிகண்டன்!

பிரிந்தது ராம்- யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி… பறந்து போ படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளர்!

உண்மையான ஆசிர்வாதம் இதுதான்… சாய்பல்லவி நெகிழ்ச்சி!

விடாமுயற்சி படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

ஒரு நபர், மரணமற்ற மற்றொரு நபரை சந்திக்கின்றார்... ‘ஏழு கடல் ஏழு மலை’ டிரைலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments