Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''அர்ஜூன் டெண்டுல்கருக்கும், சச்சினுக்கும் என் வாழ்த்துகள்’’ - சூப்பர் ஸ்டார் டுவீட்

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (18:19 IST)
''அர்ஜூன் டெண்டுல்கருக்கும், சச்சினுக்கும் என் வாழ்த்துகள்’’ என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் டுவீட் பதிவிட்டுள்ளார்

கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் ஐபிஎல் -16 வது சீசன்  போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இம்முறை  சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஹைதராபாத் அணி உள்ளிட்ட 10 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் , கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டியில், மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில், மும்பை அணியின் சார்பில், சச்சின்டெண்டுல்கரின் மமகன் அர்ஜூன் முதன் முதலில் அறிமுகமானார்.

23 வயதாகும் அர்ஜுன் கடந்த -2021 ஆம் ஆண்டு மும்பை நிர்வாகம் ஏலத்தில் எடுத்தாலும், இப்போட்டியில்தான் அறிமுகமானார்.

இதுகுறித்து, சச்சின் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’உன் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான அடி எடுத்துவைத்துள்ளார் அர்ஜூன். விளையாட்டிற்குத் தக்க மரியாதை கொடுத்து விளையாடி வரும் உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்! இவ்விடத்திற்கு வர நீ எத்தனை கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளாய் என்று…. இது ஒரு அழகான தொடக்கம்’’ என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல், கொல்கத்தா அணியின் இணை உரிமையாளரான சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தன் டுவிட்டர் பக்கத்தில்’’, என் நண்பரின்( சச்சின் டெண்டுல்கர்) மகன் அர்ஜூன் டெண்டுல்கர்  இன்று களத்தில் இறங்கி விளையாடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கிறது.  அர்ஜூன் டெண்டுல்கருக்கும் சச்சினுக்கும் என் வாழ்த்துகள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments