சின்மயி வெர்ஷனா?.. தீ வெர்ஷனா?... அடிச்சிகிட்ட ரசிகர்கள் – மணி சார் வைத்த ட்விஸ்ட்!

vinoth
வியாழன், 5 ஜூன் 2025 (11:22 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்துள்ள படம் தக் லைஃப். ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  ரவி கே சந்திரன் இசையமைத்துள்ளார். இன்று இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

இந்த படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்புக்கு படத்தின் பாடல்கள் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தன. அதிலும் படத்தில் இடம்பெற்றுள்ள முத்தமழை பாடல் இணையத்தில் வைரல் ஆனது. இந்த பாடலை தீ பாடியிருந்தார். ஆனால் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அவர் வர முடியாததால் அதை மேடையில் பாடினார் சின்மயி. அந்த வெர்ஷன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

இதையடுத்து சின்மயி வெர்ஷன் சிறந்ததா? இல்லை தீ வெர்ஷன் சிறந்ததா என ரசிகர்கள் பட்டிமன்றமே நடத்தினர். ஆனால் இன்று படம் ரிலீஸாகியுள்ள நிலையில் இதில் எந்த வெர்ஷனுமே படத்தில் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments