50 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘முத்த மழை’ சின்மயி வெர்ஷன்!

vinoth
திங்கள், 30 ஜூன் 2025 (10:12 IST)
கமல்ஹாசன், சிம்பு இணைந்து நடித்த படம் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னம் இயக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். படம் ஜூன் 5ம் தேதி வெளியாகி படுதோல்வி படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “முத்த மழை” பாடலை தீ பாடியுள்ளார். ஆனால் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்த பாடலை சின்மயி பாடினார். மேடையில் பாடிய அவரின் இந்த வெர்ஷன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்த பாடலின் தீ வெர்ஷன் நன்றாக உள்ளதா? சின்மயி வெர்ஷன் நன்றாக உள்ளதா? என்ற விவாதங்கள் எழுந்துள்ளது. பலர் படத்தில் உள்ள தீ வெர்ஷனை நீக்கிவிட்டு சின்மயி வெர்ஷனை வைக்க வேண்டும் என்று கூட பேசினர்.  இதையடுத்து படத்தின் ஆல்பத்தில் சின்மயி வெர்ஷன் இணைக்கப்பட்டது.

இதையடுத்து சின்மயி பாடிய வெர்ஷன் முத்த மழை பாடல் வீடியோ வெர்ஷன் 50 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி அறிவிப்பு.. எச்சரிக்கை விடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்..!

நாங்க எப்பவும் ஃபிரண்டுதான்!.. குஷ்புவுடன் கமல்ஹாசன்!. வைரல் போட்டோஸ்!..

பிளான கேட்டாலே தலை சுத்துது! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தனுஷ்.. ஓடி வந்த சாய்பல்லவி

கத்தரிப்பூ நிற சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த அனிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments