வெளியீட்டு தேதியை தள்ளி வைத்ததால் முருகதாஸ் படத்துடனான மோதலை தவிர்த்துள்ளது விவேகம்.
அஜித் நடித்துவரும் விவேகம் படத்தை ஜுன் 23 ரம்ஜானை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்தனர். 23 வெள்ளிக்கிழமை. பொதுவாக அஜித் படம் வியாழக்கிழமையே வெளியாகும். அதனால் ஜுன் 22 வியாழக்கிழமை விஜய்யின் பிறந்தநாளில் படம் வெளியாகும் என்று கூறப்பட்டது.
அதேநாளில் முருகதாஸ் இருமொழிகளில் மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. முருகதாஸ் அதனை அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தியிருந்தார். அஜித், படமும் மகேஷ்பாபு படமும் ஒரேநாளில் வெளியாவதாக இருந்தது.
இந்நிலையில், விவேகம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாததால் ஆகஸ்ட் 15 -ஆம் தேதிக்கு படவெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். இதனால் முருகதாஸ் படமும், விவேகமும் மோதும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.