Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸ்குக்கு இன்று வாழ்வா சாவா போட்டி!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (11:10 IST)
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம். இன்னும் 4 லீக் போட்டிகளே மீதம் உள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிக மோசமாக அமைந்து வருகிறது. வலுவான பேட்டிங் மற்றும் பவுலிங் இருந்தும் அந்த அணியின் பல வீரர்கள் சொதப்பி வருகின்றனர். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணி ப்ளே ஆஃப்க்கு செல்ல வேண்டுமென்றால் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வென்று மற்ற அணிகளின் தோல்விகளுக்காக காத்திருக்க வேண்டும்.

இந்த வாழ்வா சாவா நிலையில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் அணியும் இதே நிலைமையில்தான் உள்ளது என்பதால் அவர்களும் கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டியாக இருக்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments