Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

18 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – குறைந்து வரும் கொரோனா!

Advertiesment
18 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – குறைந்து வரும் கொரோனா!
, செவ்வாய், 5 அக்டோபர் 2021 (09:30 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,38,53,048 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 263 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,49,260 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,31,50,886 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,52,902 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கும்பலாக சுத்துவோம்.. பேருந்தில் ரகளை செய்த மாணவர்கள்! – பிரித்து அனுப்பிய காவல்துறை!