Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷிவானியுடன் கிசு கிசுக்கப்படும் முகின் ராவ்... காண்டாகி போட்ட பதிவு!

ஷிவானியுடன் கிசு கிசுக்கப்படும் முகின் ராவ்... காண்டாகி போட்ட பதிவு!
, சனி, 29 ஆகஸ்ட் 2020 (10:22 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 17 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து பெரிய நடிகர்களுக்கு சமமாக பிரபலமானார்.

இதையடுத்து தற்ப்போது ‘வெப்பம்’ பட இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கும் புதிய படத்தில் முகின் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முகினுக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் பேச்சுலர் படத்தில் நாயகியாக நடித்த திவ்ய பாரதி நடிக்கிறார். இவர்களுடன் சீரியல் நடிகை ஷிவானி ஒரு முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது.

webdunia

இதற்கிடையில் ஷிவானி தான் இந்த படத்தின் ஹீரோயின் என வதந்திகள் பரவி அதை முகினிடமே ரசிகர் ஒருவர் கேட்க கடுப்பாகிய முகின் ராவ் "இது முற்றிலும் பொய்யான தகவல் என்னுடைய படத்தை பற்றிய அறிவிப்புகளை நானே நேரடியாக வெளியிடுவேன். உங்களின் அக்கறைக்கும்,  வாழ்த்துக்களுக்கும் நன்றி என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடிடி பக்கம் ஒதுங்குகிறதா மூக்குத்தி அம்மன்? ஆர் ஜே பாலாஜி பேச்சுவார்த்தை!