ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ள அதர்வா - தி ஆரிஜின் எனும் கிராஃபிக் நாவலில் நாயகனாக தோன்றுகிறார் எம்.எஸ்.தோனி.
மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ ஒரு மெகா பட்ஜெட் கிராஃபிக் நாவலை உருவாக்கியுள்ளது. அதர்வா - தி ஆரிஜின் எனும் இந்த நாவலில் நாயகனாக தோன்றுகிறார் எம்.எஸ்.தோனி. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இதனை எழுதியுள்ளார்.
இந்நிலையில் இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை இன்று தோனி தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தோனியின் இந்த புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காமிக்ஸ் அமேசான் தளத்தில் வெளியாகவுள்ளது.
இதனிடையே இது குறித்து கூறியதாவது, இந்த பிரம்மாண்டமான புதிய முயற்சியில் நானும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சி. அதர்வா - தி ஆரிஜின் ஒரு ஈர்க்கும் கதையும் மற்றும் அதி அற்புதமான கலைத்தன்மையும் கொண்ட வசீகரிக்கும் கிராபிக் நாவல் என குறிப்பிட்டுள்ளார்.