Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்ப ரிலீஸ் பண்ணாதான் கரெக்டா இருக்கும்… தோனி படம் மீண்டும் வெளியீடு?

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (07:32 IST)
ஐபிஎல் போட்டிகள் வந்தாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற அணி ரசிகர்களுமே தோனியின் சிக்ஸர்களை காண குவிந்து விடுவர். இந்திய அணி ஜாம்பவான் வீரரான தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால் அப்படி ஒரு மவுசு.

தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி விரைவில் ஓய்வு பெற உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது. ஒவ்வொரு சீசனிலும் அப்படி சொல்லப்பட்டாலும் கூட இதுவரை தோனி அவராக அவரது ஓய்வு குறித்து பேசவில்லை. ஆனால் இந்த ஐபிஎல்லில் ஆரம்பம் முதலே ஓய்வு பெறப் போவது போல சில இடங்களில் மறைமுகமாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்த சீசன்தான் தோனிக்குக் கடைசி சீசன் என நினைத்து ரசிகர்கள் அனைத்து மைதானத்துக்கும் மஞ்சள் உடை அணிந்து வந்து ஏகோபித்த ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனிக்கு இப்போது கிடைக்கும் வரவேற்பை அடுத்து அவரின் பயோபிக் படமான தோனி படத்தை மீண்டும் மே 12 ஆம் தேதி ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments