Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்னையர் தினத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டியின் உருக்கமான பதிவு!!

Webdunia
திங்கள், 13 மே 2019 (12:00 IST)
அன்னையர் தினத்தையொட்டி நடிகை ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது தாய்க்கு மிகக் கொடூரமான தண்டனையை கொடுத்துவிட்டதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் பல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை நடிகை ஸ்ரீ ரெட்டி கூறினார். திரை உலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது  தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவர் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று அன்னையர் தினத்தையொட்டி தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் நிறைய மதிப்புமிக்கவைகளை கற்று கொடுத்துள்ளீர்கள். அது போதும் அம்மா. நான் மீண்டும் வளர்ந்து வருகிறேன். மேலும் தனது தாய்க்கு மிகக் கொடூரமான தண்டனையை கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் அதில் "அம்மாவை தவிர நம்மை வேறு யாரால்  பார்த்துக்கொள்ள முடியும். ஐ லவ் யூ அம்மா. நீங்களும் என்மேல் அன்பு வைத்துள்ளீர்கள். என்னுடை பிறப்பை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். என்னை போன்ற ஒரு பெண்ணுக்கு வேறு எந்த தாயும் பிறப்பு கொடுத்திருக்க மாட்டாள்.
 
நான் உங்களுக்கு நிறைய கஷ்டங்களை கொடுத்துவிட்டேன். இது நீங்கள் கொடுத்த உடம்பு. அதனால் நீங்களே எனது உயிரை பறித்து  விடுங்கள். நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா". இவ்வாறு ஸ்ரீ ரெட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்