Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிர்லியண்ட் நயன்தாரா ரொம்ப நன்றி: ஹேப்பியான ஆர்.ஜே பாலாஜி

Advertiesment
பிர்லியண்ட் நயன்தாரா ரொம்ப நன்றி:  ஹேப்பியான ஆர்.ஜே பாலாஜி
, திங்கள், 13 ஜனவரி 2020 (08:50 IST)
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள ’மூக்குத்தி அம்மன்’ என்ற படம் உருவாகி வருகிறது. வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில்... மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு   நவம்பர் 29, 2019 அன்று துவக்கி 44 நாட்கள் இடைவிடாமல் நடந்து முடிந்தது. அத்துடன் இப்படத்தின்  90 சதவீத படத்தை முடித்திருக்கிறோம். இந்த மறக்கமுடியாத படப்பிடிப்புக்கு கடவுளுக்கு நன்றி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள், எனது அற்புதமான குழு மற்றும் அற்புதமான நயன்தாராவுக்கு நன்றி என கூறியுள்ளார். 
 
webdunia

 
இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு வருகிற கோடை விடுமுறையில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

And thats the schedule wrap .!


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் அடுத்த படத்தில் அக்ஷய்குமார்: புதிய தகவல்