Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சம்பளமே கிடையாது.. குதிரை, ஆடு மேய்க்கணும்! - மோகன்லால் மகனுக்கு இந்த நிலைமையா?

Advertiesment
Pranav Mohanlal

Prasanth Karthick

, செவ்வாய், 12 நவம்பர் 2024 (11:18 IST)

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பண்ணை ஒன்றில் சம்பளம் கூட இல்லாமல் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

மலையாள சினிமா உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக அறியப்படுபவர் மோகன்லால். மலையாளத்தில் மிக அதிகமான படங்கள் நடித்தவர் என்ற பெருமையும் மோகன்லாலுக்கு உண்டு. மோகன்லாலில் மகன் ப்ரணவ் மோகன்லால் 2022ம் ஆண்டில் வெளியான ‘ஹ்ருதயம்’ படத்தில் நடித்து பிரபலமானார்.

 

இவர் நடித்த வர்ஷங்களுக்கு ஷேஷம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. ஆனால் அதன்பின்னர் அவர் நடிக்கும் படங்கள் பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தனது மகன் ப்ரணவ் ஸ்பெயினில் பண்ணை ஒன்றில் சம்பளம் கூட இல்லாமல் வேலை பார்த்து வருவதாக மோகன்லால் மனைவி சுசித்ரா மோகன்லால் கூறியுள்ளார்.
 

 

இதுகுறித்து பேசிய அவர் “ப்ரணவ் ஆண்டுக்கு 2 படம் நடிப்பான் என எதிர்பார்த்தேன். ஆனால் அவன் 2 ஆண்டுகளுக்கு ஒரு படம் என்றே நடித்தான். என் கணவரும், மகனும் சேர்ந்து நடிக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தற்போது ப்ரணவ் ஸ்பெயினில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்க்கிறார். அவருக்கு சம்பளமே கிடையாது. தங்குமிடம், உணவு மட்டும்தான். தினம் குதிரை, ஆடு, மாடுகளை பராமரிக்க வேண்டும். அது அவருக்கு ஒரு அனுபவமாக அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

 

ப்ரணவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் அவர் அடுத்து நடிக்க போகும் படத்தில் வரும் கதாப்பாத்திரத்திற்காக நேரடியாக அந்த அனுபவங்களை பெறுவதற்காகதான் எனவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 நாட்களுக்கு கனமழை என்ற அறிவிப்பு.. ‘கங்குவா’ வசூலுக்கு சிக்கலா?