Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிசம்பரில் வெளியாகும் மோகன்லால் இயக்கும் பரோஸ் திரைப்படம்!

டிசம்பரில் வெளியாகும் மோகன்லால் இயக்கும் பரோஸ் திரைப்படம்!
, திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:51 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கும் முதல் படமாக ‘பரோஸ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளிப்போய் அவ்வப்போது படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த படத்தில் மோகன்லால் டைட்டில் கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவருடன்  Paz Vega என்ற ஹாலிவுட் நடிகை நடித்துள்ளார். இந்த படத்தை 3 டி தொழில்நுட்பத்தில் சந்தோஷ் சிவன் படமாக்கியுள்ளார். லிடியன் நாதஸ்வரம் இந்த திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகள் வெளிநாடுகளில் நடந்து வரும் நிலையில் படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு ரசிகர்களுக்கு டிவிட்டரில் நன்றி கூறிய சூர்யா!