Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்புரான் படத்துக்கு சென்னையில் அதிகக் காட்சிகள்.. மாஸ் காட்டும் மோகன்லால் & பிருத்விராஜ் கூட்டணி!

vinoth
புதன், 26 மார்ச் 2025 (08:25 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாள் தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது. இதையடுத்து ‘எம்பூரான்’ திரைப்படம் மார்ச் மாதம் 28 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் டிரைலர் வெளியாகி இந்திய அளவில் கவனம் செலுத்தியது. நாளை இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்துக்கு சென்றுள்ளது.

சென்னையில் இந்த படத்துக்கான காட்சிகள் அதிகளவில் திரையிடப்படவுள்ளன. நாளை விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படமும் ரிலீஸாகிறது. ஆனாலும் சென்னையில் பல இடங்களில் எம்புரான் படத்தின் தமிழ் மற்றும் மலையாள வெர்ஷனுக்குக் கணிசமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல திரையரங்கள் தங்கள் பிரதான திரையிலேயே எம்புரான் படத்துக்குக் காட்சிகள் ஒதுக்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்மேன் - ஆண்டவர் தரிசனத்துக்கு ரெடியா? நாளை ‘Thug Life’ ட்ரெய்லர்!

தனுஷ், சிம்பு படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

என்னால சண்முகபாண்டியனுக்கு ‘No’ சொல்ல முடியல… படை தலைவன் நிகழ்ச்சியில் சசிகுமார் உருக்கம்!

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் நடிக்கிறாரா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

விஜய் ஆண்டனி படத்தின் தலைப்பு மாற்றம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments