Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசூல் சாதனைப் படைத்த மோகன்லாலின் ‘எம்புரான்’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (13:28 IST)
மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் தொடக்கத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் சிலக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சில இந்து அமைப்புகள் இதில் உள்ள சில காட்சிகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, உடனடியாக படக்குழு 17 இடங்களில் காட்சிகளை வெட்டவும், வசனங்களை ம்யூட் செய்து படத்தை மறு தணிக்கை செய்துள்ளது.

மேலும் நடிகர் மோகன்லால் தான் ஒரு கலைஞன் என்றும் எந்த மதத்துக்கும் எதிரானவன் இல்லை என்றும் கூறி வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏதேச்சதிகாரத்தோடு கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாகக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இப்படி பல சர்ச்சைகள் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் இருந்தும் ‘எம்புரான்’ திரைப்படம் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. இந்நிலையில் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் ஜியோ-ஹாட்ஸ்டார் தளத்தில் ‘எம்புரான்’ படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments