Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன்லாலின் மலைக்கோட்டை ஷூட்டிங் நிறைவு.. ரிலீஸ் எப்போது?

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (14:47 IST)
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான லிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரி முதன் முதலாக மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலை இயக்கும் திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன்.இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஆகியோரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க விரும்பி, அவர்களிடம் மோகன்லால் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்ல்லப்பட்டது.

ஆனால் கமல்ஹாசன் இந்தியன் 2 பட வேலைகளைக் காரணம் காட்டி அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் என்றும், ரிஷப் ஷெட்டியும், தனது அடுத்த பட வேலைகளைக் காரணம் காட்டி மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 130 நாட்கள் நடந்து தற்போது முடிந்துள்ளது.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்ட கதையான இதில் மோகன்லால், மல்யுத்த வீரராக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது.  இந்த படத்தில் சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த மல்யுத்த வீரரான காமா என்கிற குலாம் முகமது பக்ஷ் என்பவரின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை படத்தின் தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேரில் ஆஜராக வேண்டும்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்..!

சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய நடிகையின் சகோதரி.. குவியும் பாராட்டுக்கள்..!

‘மார்க்கெட் இல்லாத ஹீரோவுக்கு நான் ஹிட் கொடுத்தேன்.. ஆனால் அவர்’ – சுந்தர் சி ஆதங்கம்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… டிரைலர் & பாடல் ரிலீஸ் அப்டேட்!

பிரியங்காவின் கணவர் வயது இவ்வளவுதானா? வயதானவர் என நினைத்து விட்டோமே..!

அடுத்த கட்டுரையில்
Show comments