Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

vinoth
ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (10:33 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்கி வருகிறார்.

ஆனால் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாள் தாமதத்துக்குப் பிறகு இப்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் மோகன் லாலின் 64 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு எம்பூரான் திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. அதையடுத்து விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக நடந்து வந்த ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

எம்பூரான் திரைப்படத்தின் ரிலீஸ் மார்ச் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மஞ்சுவாரியர், பிருத்விராஜ் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments