தனி ஒருவன் 2 படத்துக்குப் பிறகு ஜெயம் ரவிக்கு இன்னொரு பார்ட் 2 படத்தை இயக்கும் மோகன் ராஜா!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (10:29 IST)
2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜாவின் முதல் சொந்தக் கதை இந்த திரைப்படம்.

இந்த படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு இணையாக வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரமும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தனி ஒருவன் 2 மட்டுமில்லாமல் மோகன் ராஜா தன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க உள்ளதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ஆனால் இரண்டாம் பாகத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்த நதியா இடம்பெற மாட்டார் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்பன் உதயநிதியின் படத்தை இயக்குகிறேனா?... மாரி செல்வராஜ் பதில்!

ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளர்களுக்கு இலாபம் கொடுத்த ‘பைசன்’ திரைப்படம்!

சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் கதாநாயகி ஆகும் மாளவிகா மோகனன்!

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களின் திட்டங்கள்: தயார் நிலையில் 2 இயக்குனர்கள்.

மீண்டும் விஜய் சேதுபதி - பாண்டியராஜ் கூட்டணி: லைக்கா நிறுவனம் தயாரிக்கிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments