Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருஷ்யம் 2 வெளியீடு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மோகன் லால்!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (08:28 IST)
மோகன்லால் மீனா மற்றும் பலர் நடித்துள்ள திருஷ்யம் 2 படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நேற்று ரிலீஸானது.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் நேற்று வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் மோகன்லால் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘ரசிகர்களின் வரவேற்பால் நான் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளேன். அதற்குள்ளாகவே பலரும் படம் பார்த்துவிட்டு என்னை அழைத்தும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் வருவது மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது. சினிமா ரசிகர்கள் நல்ல திரைப்படம் வெளியானால் அதற்கான ஆதரவை அளிப்பார்கள் என்பதை உறுதி செய்துள்ளீர்கள்.

நீங்கள் பொழியும் அன்புக்கு நன்றி. இது எங்கள் படக்குழுவுக்கும் உறுதுணையாக இருக்கும். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த அமேசான் ப்ரைம் தளத்துக்கு நன்றி.’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

தயாரிப்பாளர் லலித் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதானா?... கதை ‘மைனா’ மாதிரி இருக்கே!

அடுத்த கட்டுரையில்
Show comments