Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன் லாலின் எம்பூரான் திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

vinoth
புதன், 5 ஜூன் 2024 (07:35 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாள் தாமதத்துக்குப் பிறகு இப்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் மோகன் லாலின் 64 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் எம்பூரான் திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இப்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார். அவர் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments