பண்டிகையை குறிவைக்கும் ரஜினியின் வேட்டையன் ரிலீஸ்!

vinoth
புதன், 5 ஜூன் 2024 (07:34 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது அவர் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துறவியோடு பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் பல விஷயங்களை  பேசும் நிலையில் வேட்டையன் படம் பற்றியும் பேசியுள்ளார்.

அதில் வேட்டையன் திரைப்படம் தசரா பண்டிகையை முன்னிட்டு ரிலிஸாகும் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments