Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியல் ஒரு சேறு… ரஜினியின் முடிவுக்கு தெலுங்கு நடிகர் ஆதரவு!

Advertiesment
அரசியல் ஒரு சேறு… ரஜினியின் முடிவுக்கு தெலுங்கு நடிகர் ஆதரவு!
, வெள்ளி, 1 ஜனவரி 2021 (15:32 IST)
நடிகர் மோகன் பாபு ரஜினியின் அரசியல் முடிவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்து அதிர்வுகளை ஏற்படுத்தினார். பல தரப்பில் இருந்தும் இதற்கு ஆதரவாகவ குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் ரஜினியை வைத்து அரசியல் லாபம் பார்க்கலாம என நினைத்த சிலருக்கு இந்த முடிவு அதிர்ச்சியைதான் ஏற்படுத்தியுள்ளது.  மொத்தத்தில் அரசியல் உலகில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த முடிவுக்கு பின்னால் இருப்பவர்கள் என்று தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சிரஞ்சீவியும் மோகன் பாபுவும்தான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மோகன் பாபு ரஜினியின் முடிவை ஆதரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ரஜினியின் இந்த முடிவு பலருக்கும் ஏமாற்றம் அளிக்கலாம், ஆனால் ஒரு நண்பனாக அவரின் உடல்நிலையைப் பற்றி அறிந்தனவாக இந்த முடிவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அரசியல் குறித்து பலமுறை நான் அவரிடம் பேசியுள்ளேன். அரசியலில் இறங்கும் வரை நல்லவன் என்று சொல்பவர்கள் நாளை அரசியலுக்கு வந்தபின் கெட்டவன் என்பார்கள். அரசியல் சேறு உங்கள் மேல் ஒட்டாமல் இருப்பதே உங்களுக்கு நல்லது எனக் கூறியிருந்தேன். என்னைப் போலவே நீங்களும் அவரின் முடிவை ஏற்றுக் கொள்வீர்கள்’ என நம்புகிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு