ஐபிஎல் திருவிழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி மேற்குவங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் போட்டி நடக்கும் பகுதியில் நேற்று மிதமான மழைப் பெய்துள்ளது. இதன் காரணமாக வீரர்கள் பயிற்சிகளை சீக்கிரமே முடித்துக் கொண்டனர். மைதானம் முழுவதும் தார் பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் இன்று போட்டி நடக்கும் போது மழைக் குறுக்கிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று மழைப் பெய்ய 25 சதவீதம் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஐபிஎல் தொடக்க விழாப் போட்டியைக் காண ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமான ஒன்றாக அமைந்துள்ளது.