இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்களை காப்புரிமையை காரணம் காட்டி எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இளையராஜாவின் இந்த நடவடிக்கையை அவரது சகோதரர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் மட்டுமே இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு பாடல் அந்த பாடலை இசையமைத்த இசை அமைப்பாளருக்கு மட்டும் சொந்தமில்லை என்றும் அந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கும் சொந்தம் என்றும் பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருவேளை இளையராஜா சொல்வது சரி என்றாலும் கூட, அவரே வெளியில் பாடல்களை பாடினால் பாடலாசிரியரிடமும், தயாரிப்பாளரிடமும் அனுமதி பெற வேண்டும் என்றும் மதன் கார்க்கி கூறியுள்ளார்.
மேலும் இந்த விஷயத்தை இளையராஜா ஒரு போன் செய்து எஸ்பிபிக்கு கூறியிருக்கலாம் என்றும், நோட்டீஸ் வரை சென்று மிகையானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.