தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் என்று உறுதிசெய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது, தேமுதிக கட்சிக்குத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து கலந்தாலோசிக்க வேண்டி அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி,மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் சந்தித்தனர்.
இன்று இரவுக்குள் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாடிவிடும் எனவும் பாஜகவுக்கு நாளைக்குள் எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்பது தெரியவரும் எனத் தகவல்கள் வெளியாகிறது.