அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வாய்த்துள்ளார். இந்த நிலையில், திமுக இளைஞரணி மாவட்ட-மாநகர அமைப்பாளர்/ துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
திமுக கட்சியின் இளைஞரணி செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் தேதி நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்வானார். அதன்பின்னர், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார்.
சமீபத்தில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
திமுகவின் இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்து ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு திமுகவினர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் உதய நிதி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் திமுக இளைஞரணி மாவட்ட-மாநகர அமைப்பாளர்/ துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியரின் கொள்கை வழியில் பயணித்து நம் கழகத் தலைவர் முக.ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்த தொடர்ந்து உழைப்போம். அனைவருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.