Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி!

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2019 (20:15 IST)
பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சிக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை டிக்கெட் விலையை உயர்த்தி திரையரங்கினர் விற்பனை செய்து வருவது தெரிந்ததே. அதேபோல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் ஒன்றுக்கு ரூ.30 வரை சேவைக்கட்டணம் பெறப்படுகிறது. மேலும் பார்க்கிங் முதல் தியேட்டரில் விற்கும் திண்பண்டங்கள் வரை இஷ்டத்திற்கு அவர்கள் வைத்ததுதான் விலை என்ற நிலை உள்ளது
 
இந்த நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'விரைவில் ஆன்லைனி மட்டுமே சினிமா டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் அரசு நிர்ணயித்த விலையில் அரசின் செயலி மூலமே இனி டிக்கெட்டுக்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்
 
அதுமட்டுமின்றி திரையரங்குகளில் விற்கப்படும் பொருட்களின் விலையையும் ஒழுங்குபடுத்த பல்வேறு விதிமுறைகளை வகுத்து, அதன்படி செயல்படுத்தி வருவதாகவும், சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவதுடன், அதற்கான விலை நிர்ணயிக்கப்பட்டு, அதுவும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
 
ஆன்லைனில் அரசின் செயலியில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டால் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கனிமா’ பூஜா ஹெக்டேவின் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments