Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேதகு-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (09:37 IST)
மேதகு படத்தின் இரண்டாம் பாகத்தின் திரையரங்க ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் இளமைக்கால வாழ்வை சொல்லும் படமாக வெளியாகியுள்ளது மேதகு. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது. முதல் பாகத்தில் பிரபாகரன் எப்படி ஆயுதப் பாதையை தேர்ந்தெடுத்தார் என்பது வரை மட்டுமே சொல்லப்பட்டு இருந்தது. அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வரும் எனப் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது மேதகு-2 திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இல்லாமல் புதுக்கலைஞர்கள் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.  நவம்பர் 26 ஆம் தேதி மறைந்த விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 67 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மேதகு 2 படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியானது. டிரைலருக்கு பரவலான வரவேற்புக் கிடைத்ததை அடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பாகம் போல ஓடிடியில் வெளியாகாமல் திரையரங்குகளில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments