Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெர்சல் டீசர் 1 மில்லியன் லைக்ஸ் கடந்து சாதனை; ட்ரண்டாகிவரும் ஹாஷ் ட்டேக்ஸ்

Advertiesment
மெர்சல் டீசர் 1 மில்லியன் லைக்ஸ் கடந்து சாதனை; ட்ரண்டாகிவரும் ஹாஷ் ட்டேக்ஸ்
, ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (13:17 IST)
விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகிவிடும் என ரசிகர்கள் நம்பிக்கையாக இருக்கின்றனர். நாளை முதல் அனைத்து  திரையரங்குகளிலும் முன்பதிவு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 
 
இப்படம் படம் வெளியாக இன்னும் மூன்று தினங்கள் உள்ளது. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியம் அளிக்காத  தடையில்லா சான்றிதழ் காரணமாக கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் தரப்பிலும், தயாரிப்பாளர்  மற்றும் படக்குழு மத்தியில் படத்தை எப்படியாவது வெளியிட்டு வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவே  அனைவரின் எதிர்பார்ப்பு.
 
தளபதி விஜய்யின் மெர்சல் டீஸர் தான் உலகிலேயே அதிகம் பேர் லைக் செய்யப்பட்ட டீஸராக இருந்து வருகிறது. சென்ற  மாதம் 21ம் தேதி வெளியான இந்த டீசரை இதுவரை 28-மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அதோடு மெர்சல் டீசர் 1 மில்லியன் லைக்ஸ் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது.
 
ஏற்கனவே மெர்சல் டீசர் அதிக பார்வைகளை பெற்று உலக சாதனை செய்த நிலையில் தற்போது 1 மில்லியன் லைக்ஸ் பெற்று அடுத்த சாதனை பெற்றுள்ளது. இதற்காக ட்விட்டரில் 1M MERSAL WORLD RECORD LIKES,  #MersalTeaserHits1MLikes என ஒரு புது Tagகள் ட்ரண்டாகிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த விஷயத்தில் அர்ஜுன் ரெட்டியை மிஞ்சும் ஜி.வி.பிரகாஷ்: ஆதிக் தகவல்!!